பட்டப்பகலில் பிரபல நடிகையை அடித்து உதைத்துவிட்டு அவரிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
பிரபல நடிகைக்கு நடு ரோட்டில் அடி, உதை! விலை உயர்ந்த பொருட்களும் திருட்டு!

இந்தி திரையுலகில் முன்னணி
நடிகையாக வலம் வந்தவர் பர்ஹீன். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை
காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு முழுக்கு
போட்டுவிட்டு முழு நேர ஹவுஸ் ஒயிப் ஆகிவிட்டார். தற்போது டெல்லியில் நடிகை பர்ஹீன்
வசித்து வருகிறார்.
டெல்லியில் சர்வ்பிரியா விஹாரில் உள்ள தனது
வீட்டில் இருந்து பர்ஹீன் சாக்கேட் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு
சென்றுள்ளார்.போக்குவரத்து சிக்னல் சிவப்பு விளக்கு விழுந்த போது பர்ஹீன் தனது
காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் காரின் ஜன்னலை
தட்டியுள்ளார். என்ன என்று கேட்பதற்கு பர்ஹீன் ஜன்னலை திறந்துள்ளார்.
அப்போது மறுபுறத்தில் இருந்து காரின்
கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை ஒருவன் திருட முயன்றுள்ளான். இதனால்
அச்சம் அடைந்த பர்ஹீன் உடனடியாக திருடனை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். ஆனால்
ஆபாசமான வார்த்தைகளை பேசியபடி தங்களிடம் இருந்த கத்தியை காட்டி பர்ஹீனை திருடர்கள்
மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன பர்ஹீன் தன்னிடம் இருந்த 16
ஆயிரம் ரூபாய் பணம் மற்றும தனது விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை
திருடர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அங்கிருந்த தப்ப முயன்ற போது திடீரென
காரில் இருந்து இறங்கிய பர்ஹீன் திருடர்களில் ஒருவனை பிடிக்க முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந் திருடர்கள் நான்கு
பேரும் ஒன்று சேர்ந்த பர்ஹீனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்து சம்பவ
இடத்திலேயே பர்ஹீன் மயங்கி விழுந்தார். பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் பர்ஹீனை
மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பர்ஹீனை தாக்கி திருடிச்
சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.