நான் என்ன செஞ்சாலும் என் குழந்தையை ஃபாலோ பண்ணுனாங்க..! அது தான்..! சின்னத்திரை மோனிகா வெளியிட்ட பகீர் தகவல்!

தான் வெளியிட்ட வீடியோவை புரிந்துகொள்ளாமல் தன்னுடைய மகனை வைத்து மிரட்டியதாக டிவி பிரபலம் மோனிகா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.


தனியார் தொலைக்காட்சியில் வானிலை செய்திகள் மூலம் பிரபலம் ஆனவர் மோனிகா. பின்னர் சீரியல், சினிமாக்களிலும் அவ்வப்போது தோன்றினார். இதற்கிடையே சமூகவலைதளங்களில் அரசியல், சமூகப் பிரச்னைகள் குறித்து பேசி வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இந்த வீடியோவில் வந்த பிரச்சனையால் இவரது வேலையும் பறிபோனது.

இதுகுறித்து மோனிகா தெரிவித்தபோது, கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்ச நாள் மீடியாவுல இருந்து ஒதுங்கியிருந்தேன். ஆனாலும் திரும்பவும் சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்ததால் நடித்தேன். விபத்து ஒன்றில் சிக்கியதால் சீரியலில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால்தான் சமூக அக்கறையோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் சில வீடியோக்களை பகிர்ந்து வந்தேன். அதனால் வேறு மாதிரியான பிரச்சனைகள் உருவாகி வந்தது. நான் பேசியது நியாயம் என்று கூட யோசிக்க தெரியாத சிலர் பேசவேக்கூடாது என்ற ரீதியில் எதிர்த்தனர். இதனால் என் மகன் படிக்கும் பள்ளியில் நோட்டமிட்டனர். அவனை வைத்து என்னை மிரட்டினர் என்றே சொல்லலாம். இதனால் இந்த மாதிரி ரிஸ்க்கான வேலை வேண்டாம் என வீட்டில் கேட்டு கொண்டால் விட்டுவிட்டேன். ஆனால் பயந்துபோய் விடவில்லை. நேரம் கிடைக்கும்போது பேசுகிறேன்.

வேலூர் தேர்தலில் அதிமுகதான் ஜெயிக்க வேண்டிய சூழல். ஆனால் கடைசிநேரத்தில் முத்தலாக் பற்றி ரவீந்திரநாத் பேசியதால் அங்கு அதிமுக வெற்றி பெறவில்லை. தற்போது கணவர் மேத்யூ அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார். பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து பணிபுரிவதால் அவருக்கு உதவியாக இருக்கிறேன் என்று முடித்தார் மோனிகா