நடிகை அனன்யா உடல் எடையை குறைத்து ஸ்லிம் மற்றும் மாடர்னான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாடோடிகள் நடிகை அனன்யாவா இது? எப்புடி இருந்தவங்க இப்படி கவர்ச்சி ஆயிட்டாங்க? புகைப்படம் உள்ளே!

நடிகர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை அனன்யா அறிமுகமாகி இருந்தார். நாடோடிகள் திரைப்படத்தில் நடிகை அனன்யா தன்னுடைய இயல்பான மற்றும் துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் .
அதற்கு பின்னர் வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை அனன்யா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மற்றும் மாடர்னான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் இது நடிகை அனன்யா தானா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் .
நடிகை அனன்யா தற்போது தெலுங்கில் மகரிஷி என்ற திரைப்படத்திலும், தமிழில் சுந்தர் சி இயக்கவுள்ள அரண்மனை திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .