வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே அந்த ஹீரோவ சைட் அடிச்சேன்! பிரபல நடிகை வெளியிட்ட சீக்ரெட்!

தான் வயசுக்கு வருவதற்கு முன்பே பிரபல நடிகர் ஒருவரை சைட் அடித்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.


   இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இதனை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் பிரம்மாஸ்த்ரா, கல்லி பாய், கலன்க் ஆகிய படங்களில் கதாநாயகியாக ஆலியா நடித்து வருகிறார். இதில் பிரம்மாஸ்த்ரா படத்தில் நடிக்கும் போது படத்தின் நாயகன் ரன்பீர் கபூருடன் ஆலியாவுக்கு காதல் மலர்ந்தது.

  இதனால் ஆலியா பட் தனது காதலன் சித்தார்த் மல்ஹோத்ராவை கழட்டிவிட்டு ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆலியா பட் மீது ரன்பீருக்கும் காதல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் தற்போது காதலர்களாக சுற்றி வருகின்றனர். ரன்பீர் வீட்டுக்கு ஆலியா செல்வதும், ஆலியா வீட்டுக்கு ரன்பீர் செல்வதும் வழக்கமாகியுள்ளது. இருவரையும் மிக நெருக்கமான நிலையில் புகைப்படங்களும் எடுத்து பலர் வெளியிட்டு வருகின்றனர்.

   இந்த நிலையில் பழைய காதலனை கழட்டிவிட்டு ரன்பீரை காதலிப்பதற்கான காரணம் குறித்து ஆலியாவிடம் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தனக்கு சின்ன வயது முதலே ரன்பீரை தெரியும் என்று ஆலியா கூறினார். அதாவது தனக்கு 11 வயது இருக்கும் போது முதல் முறையாக ரன்பீரை சந்தித்ததாக ஆலியா தெரிவித்தார். அப்போது தான் வயதுக்கு கூட வரவில்லை என்றும் ஆலியா கூறினார்.

   அப்போதே ரன்பீரின் பெர்சனாலிட்டியை பார்த்து சைட் அடித்ததாகவும், அதன் பிறகு ரன்பீருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ஆலியா தெரிவித்தார். தற்போது பிரம்மாஸ்த்ரா படப்பிடிப்பில் அதிக நேரம் ரன்பீருடன் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததாவும், அப்போது ரன்பீரை மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்ததாகவும் ஆலியா தெரிவித்தார். எனவே தான் ரன்பீரை காதலித்து வருவதாகவும் பதில் அளித்தார்.