என் 3வது கணவரின் ரேட் ரூ.1 கோடி..! பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்பில் வனிதா வெளியிட்ட தகவல்!

நடிகை வனிதா விஜயகுமார் நேற்றைய தினம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு இருந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி இவர்களின் திருமணம் குறித்து போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா அறிமுகமானார். அதன்பின்னர் இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு தனது கணவரை நடிகை வனிதா விவாகரத்து செய்தார். 

பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை வனிதா அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்று பிரிந்தார். அதன்பின்பு நடிகை வனிதா கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை வனிதா நேற்றைய தினம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் பீட்டர் பால் இன் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமலேயே நடிகை வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டிருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிலும் இந்த புகாரானது கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகை வனிதா முதன் முறையாக மனம் திறந்து கூறியிருக்கிறார். 

எங்கள் திருமணம் நல்ல படியாக நடந்தேறியது அடுத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்னுடைய தரப்பிலிருந்து தான் பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக பீட்டரின் முதல் மனைவி அவர் மீது புகார் அளித்திருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் நான் ஏமாந்து விட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. நான் பீட்டரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்புதான் அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். அவரும் அவரது முதல் மனைவியும் பிரிந்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது.

அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லாத நிலையில் தற்போது எங்கள் திருமணத்தை அடுத்து இந்த பிரச்சினை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் எங்களுடைய வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து விட்டோம். இனி அவர்கள் இதைப் பார்த்துக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் பீட்டரின் முதல் மனைவி ஒரு கோடி ரூபாய் எங்களிடம் கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவது. என்னால் தர இயலாது என்று நடிகை வனிதா கூறியிருக்கிறார். வனிதா வெளியிட்டுள்ள இந்த தகவலானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.