என் புருசனுக்கு பல பெண்களுடன் தொடர்பு! வனிதா பத்தோடு பதினொன்னு! முதல் மனைவி வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!

என் புருஷனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்றும் அதில் வனிதா பத்தோடு பதினொன்று என்றும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமை அன்று அவரது வீட்டில் வைத்து நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த அதிரடி திருமணம் குறித்த தகவலை நடிகை வனிதா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தகவல் தெரிய வந்த பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் தனது கணவர் மீது புகார் அளித்தார். அவர் அந்த புகாரில் விவாகரத்து செய்யாமலேயே நடிகை வனிதாவை திருமணம் செய்து கொள்ள தனது கணவர் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதைதொடர்ந்து போலீசார் விசாரணை செய்த பொழுது பீட்டர், தனது முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்ற பின்புதான் வனிதாவை திருமணம் செய்து கொள்ள போவதாக எழுதிக் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து புகாரையும் மீறி வனிதாவும் பீட்டரும் திருமணம் செய்து கொண்டது எலிசபெத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் சமூக வலை தளங்களின் வாயிலாக தனக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி கூறி நியாயம் கேட்டு வருகிறார். இன்னிலையில் அவர் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அவர் பேசிய அந்த வீடியோ பதிவில், எனக்கும் பீட்டருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மகன் ஒருவரும் மூன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் ஒருவரும் உள்ளனர். இன்னிலையில் எனது கணவருக்கு அதிகமான குடிப்பழக்கம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. ஒருவேளை அந்த பெண்களுடன் தொடர்பு இருக்கும் பொழுது ஏதாவது பிரச்சினை எழுந்தால் உடனடியாக அவர் குடிபோதைக்கு முற்றிலுமாக அடிமையாகி விடுவார். குடி போதையில் இருந்த அவரை மீட்டு எடுப்பதற்காக நாங்கள் இதுவரை 2 முறை அவரை குடி போதையில் இருந்து மீட்டெடுக்கும் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.  

இந்நிலையில் வனிதாவுக்கும் எனது கணவர் பீட்டருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றே எனக்கு தெரியவில்லை. என்னுடைய கணவருக்கு இதுவரை பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அதில் வனிதா பத்தோடு பதினொன்று.. என்று தான் நான் கூற வேண்டும். பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வெளியிட்டுள்ள இந்த தகவலானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.