சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்திற்கு பின்னர் தனக்கு நிறைய பேர் "ஐ லவ் யு" சொல்லியிருப்பதாக பிரபல நடிகை கூறியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிறைய பேர் அதை என்னுட்ட வெளிப்படையாக சொல்லியிருக்காங்க..! டிவி நயன்தாரா வெளியிட்ட சீக்ரெட்!

பிப்ரவரி 14-ஆம் தேதியன்று "ஓ மை கடவுளே" என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சின்னத்திரையில் இருந்து இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. நடிகை வாணி போஜனின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரியளவிற்கு கவர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இவர் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்தார். "ஓ மை கடவுளே திரைப்படம், என்னுடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. நடிக்க தொடங்கிய உடனே 5 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். நடிகர் வைபவ் உடன் "லாக்கப்" என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளேன். நடிகர் விதார்த் உடனும் நடிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
திரைத்துறைக்கு தற்போதுதான் வந்துள்ளதால், திரைப்படங்களை பொறுமையாக தேர்வு செய்து கொள்கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் போது என்னுடைய பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
சிறு வயதிலிருந்தே நிறைய பேர் எனக்கு "ஐ லவ் யு" கூறியுள்ளனர். ஆனால் என்றைக்கும் நான் காதலர் தினத்தை கொண்டாடியது இல்லை. இந்த காதலர் தினம் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தப்படம் வெற்றி அடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.