நாம எப்ப சேருவது? அந்த நடிகரை பார்க்கும் போதெல்லாம் கேட்பேன்! த்ரிஷா வெளியிட்ட ஹாட் தகவல்!

திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல நடிகை திரிஷா நடிகர் மோகன்லாலை பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்வியை நான் அதிகமாக கேட்டிருக்கிறேன் என்று அந்த பட விழாவில் பேசினார்.


தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் , தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது மலையாள திரைப்பட உலகிலும் கதாநாயகியாக கலக்கி வருகிறார். 

தமிழ் திரையுலகில் பல்வேறு முக்கிய ஹீரோக்களுடன் நடித்த நடிகை திரிஷா, கடந்த ஆண்டு வெளிவந்த ஹே ஜுட் என்ற மலையாளத் திரைப்படத்தில் முதன் முறையாக நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது மோகன்லால் நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு ராம் என்று பெயர் வைக்கப்பட்டு இந்த படத்திற்கான பூஜை கொச்சியில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த படத்திற்கான பூஜையில் கலந்துகொண்டு பேசிய நடிகை திரிஷா, நான் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது, அங்கே நடிகர் மோகன் லாலை பார்த்தால் நாம் எப்போது இணைந்து நடிப்போம் என்று கேள்வியை நான் அதிகமாக கேட்டிருக்கிறேன். இப்போது அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனால் என்னுடைய கனவு நினைவாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.