ரூ.65 லட்சத்துக்கு புத்தம் புதிய பென்ஸ்..! மார்கெட் போனாலும் த்ரிஷா வாங்கிய அட்டகாச கார்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை திரிஷா.


கடந்த வருடம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் திரிஷா தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.நடிகை திரிஷா தற்போது தமிழில் பொன்னியின் செல்வன் ,தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு திரைப்படத்திலும் , மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். Mercedes Bense class cabriolet C -300 சொகுசு காரை நடிகை திரிஷா வாங்கியுள்ளார். சிவப்பு நிற வண்ணத்தில் உள்ள இந்த காரின் விலையானது 65 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 65 லட்சம் கொடுத்து நடிகை திரிஷா வாங்கியுள்ள புதிய காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.