"சின்ன வீடா வரட்டுமா ..பெரிய வீடா வரட்டுமா.." என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகை தேஜாஸ்ரீ.
இப்போ நான் அந்த மாநிலத்தில் செம பிஸி! சின்ன வீடா வரட்டுமா நடிகை நியாபகம் இருக்கா?
கடந்த 2003-ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் முதன்முதலாக கால் பதித்தார் நடிகை தேஜாஸ்ரீ. இவர் நடித்த முதல் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக இவருக்கு அமையவில்லை. ஆகையால் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்த திரைப்படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் நடிக்கும் ஒரு வாய்ப்பை பெற்றார் இவர் முதன்முதலில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து "ஒற்றன்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா" என்ற திரைப்படத்தின் பாடல் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார்.
இந்த திரைப்படத்திற்குப் பின்பு மதுர, கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஜோடியாக இணைந்து நடித்த " சம்திங் சம்திங் " படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். இவர் கடைசியாக வடிவேலுக்கு ஜோடியாக இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் நடித்த திரைப்படங்களில் எதுவுமே போதிய அளவு எதிர்பார்த்த வெற்றியை இவருக்குப் அளிக்காததால் தமிழ் திரையுலகில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நடிகையாக மாறிவிட்டார். இந்த திரைப்படத்திற்கு பின்பு தமிழ் திரையுலகில் சரியான வாய்ப்பு அமையாததால் தமிழ் திரை உலகை விட்டு விலகி இருந்தார் நடிகை தேஜாஸ்ரீ .
தற்போது சினிமா துறையில் புதிய பட வாய்ப்புகள் இல்லாததை குறித்து நடிகை தேஜாஸ்ரீ இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் தமிழ் சினிமாவில் எனக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் எனக்கு மராத்தியில் நல்ல திரைப்படங்கள் கிடைத்து வருகின்றன. அங்கு முக்கிய முன்னணி நடிகைகளில் நானும் ஒருவராக திகழ்ந்து வருகிறேன். என்று மகிழ்ச்சியாக கூறினார் அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் நான் மீண்டும் கால் பதித்து வெற்றி அடைவேன் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.