பிரபல நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மெல்லிடை..! சைஸ் ஜீரோ..! எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆகிட்டாங்க? ரசிகர்களை அசர வைத்த புகைப்படம் உள்ளே!

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த விஐபி படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன் ஆவார். அதன்பிறகு ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சிம்ரன் தனது திறமையான நடிப்பின் மூலம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை சிம்ரன் அதன் பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சிம்ரன் தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் நடிகை சிம்ரன் மிகவும் அழகாக இளமையான தோற்றத்தில் உள்ளார். இதை கண்ட ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சிம்ரனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.