தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் தன் காதல் கணவரை கரம் பிடித்ததற்கான காரணத்தை முதல் முறையாக வெளிப்படையாக ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் அதுல கெட்டுக்காரர்..! வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டியது பற்றி முதல் முறையாக தமிழ் நடிகை சொன்ன சீக்ரெட்!
 
                                        
                                                                    
                				
                            	                            
தமிழ் சினிமாவின் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இந்த திரைப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
நடிகை ஸ்ரேயா, ரஷ்ய நாட்டு தொழிலதிபரான அந்தேரி கோஷ்ஷுவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண செய்தியை ரசிகர்களுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் பகிர்ந்து கொண்டார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா எப்போதும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அவர் முதல்முறையாக டிக்டாக்கில் தன்னுடைய வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் எதற்காக தன்னுடைய கணவரை கரம் பிடித்தேன் என்றும் காரணம் கூறியிருக்கிறார்.
அதாவது என் கணவர் எப்பொழுதும் எனக்கு சமையல் விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் மிகவும் உதவியாக இருப்பார். ஆகையால் தான் அவரைத் திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த வீடியோவில் ஸ்ரேயா கூறியிருப்பார். அந்த வீடியோவில் பேசி கொண்டிருக்கும் போது அருகில் சமையலறையில் இருக்கும் அவரது கணவர் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பார்.
ஸ்ரேயாவை பார்த்து அவரது கணவர் உதட்டு முத்தம் அளித்து நகைத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரேயா இந்த வீடியோவை பதிவிட்டு தன்னுடைய நண்பர்களான அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி, ஆர்த்தி ரவி , ஆர்யா ஆகியோர்களையும் நாமினேட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
