ஒரு காலத்துல விஜயுடன் ரிலேசன்ஷிப்..! இப்போ 42 வயதில் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சங்கவி தன்னுடைய 42வது வயதில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் ஆகியிருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.


தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சங்கவி ஆவார். இவர் நடிகர் விஜயுடன் இணைந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை விஷ்ணுவும் நிலாவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மேலும் இவர் கமல் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து 90களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் திரைப்படங்களில் வாய்ப்பு குறைவது எடுத்து சீரியல்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

நடிகை சங்கவி முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்தில் நடித்த

 நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தைகள் என செட்டிலான பின்பும் பல ஆண்டுகளாக நடிகை சங்கவி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வந்தார். எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு என் வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இதனையடுத்து நடிகை சங்கவி தன்னுடைய 38வது வயதில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு திரைப் படங்களில் கவனம் செலுத்தாத அவர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட துவங்கினார்.

பின்னர் நடிகை சங்கவி தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். தற்போது நடிகை சங்கவி தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை சங்கவிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.