நடிகை சமந்தா தான் ஆசை ஆசையாக வளர்த்து வந்த புகாபு நாய்க்குட்டியின் இழப்பால் ஒரு இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
இழக்க கூடாததை இழந்து ஒரு இரவு முழுவதும்..! திருமணத்திற்கு பிறகு சமந்தா உடைத்த சீக்ரெட்!

தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிகை சமந்தா பொதுவாகவே செல்லப் பிராணிகள் மீது மிகவும் ஆர்வம் காட்டுபவர். சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களுடைய ஹேஷ் என்ற நாய்க்குட்டிக்கு முதலாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.
அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர். அந்த புகைப்படத்தை பதிவிடும் போது நடிகை சமந்தா, தன் வாழ்வில் நடைபெற்ற சோகமான சம்பவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அதாவது நடிகை சமந்தா, முதலில் புகாபு என்ற நாய்க்குட்டியை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். ஆனால் அந்த நாய்க்குட்டி பார்வோ என்ற வைரஸ் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இதனால் நடிகை சமந்தா மிகவும் சோகத்தில் ஆழ்ந்ததாகவும் ஒரு இரவு முழுவதும் இழக்கக் கூடாததை இழந்து விட்டு , விடாமல் அழுது கொண்டே இருந்ததாகவும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார். வீட்டிற்கும் வாசலுக்கும் அழுதபடி இருந்ததாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்குப் பின்பு எந்த ஒரு செல்லப்பிராணியையும் வளர்க்கக் கூடாது என்று இருந்த சமந்தாவிற்கு அவரது கணவர் நாகசைதன்யா அழகிய ஹேஷ் என்ற புதிய நாய் குட்டியை பரிசாக அளித்துள்ளார். தற்போது நாகசைதன்யா பரிசாக வழங்கிய ஹேஷ் என்ற நாய் குட்டிக்கு தான் பிறந்தநாளை இந்த ஜோடி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.