நடிகை சமந்தாவுக்கு அவரது மாமனார் போட்ட திடீர் கண்டிசன்..! என்ன தெரியுமா?

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை சமந்தா. இவருடைய மாமனார் நடிகர் நாகர்ஜுனா புதிய கண்டிஷனை போட்டுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.


தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்களது காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பும் பல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதேபோல் நடிகை சமந்தா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் . பொதுவாகவே இவர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. ஆனால் தற்போது நடிகை சமந்தாவிற்கு அவரது மாமனார் நாகார்ஜுனா புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். 

நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்பும் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதால் நெட்டிசன்கள் அவரைத் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா அவருக்கு புதிய கண்டிஷன் போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதை உறுதி செய்யும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சமந்தா மற்றும் நாகசைதன்யா தம்பதியினர் கோவாவிற்கு சென்றனர். எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா எந்த ஒரு புகைப்படத்தையும் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.