பிரபல நடிகை ராஷ்மி தேசாய் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் பற்றிய தகவல்களை வெளிப்படையாக ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
கூல்டிரிங்சில் மயக்க மருந்து..! தனி அறையில் முன்னணி நடிகைக்கு ஏற்பட்ட கேஸ்டிங் கவுச் அனுபவம்!
நடிகை ராஷ்மி தேசாய் சினிமாவில் கால் பதித்த பொழுது அவருக்கு 16 வயது ஆகும். 16 வயதிலேயே நடிகை ராஷ்மி தேசாய் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு பட வாய்ப்புகளை தேடி கொண்டிருந்திருக்கிறார். வாய்ப்பு கேட்டு வந்த ராஷ்மி தேசாய் அவர்களை ஒருவர் தவறாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ததாக நடிகை மனம் திறந்து கூறியிருக்கிறார்.
நடிகை ராஷ்மி தேசாய் நடிப்பதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருந்த பொழுது சூரஜ் என்பவர் அவரிடம் நீங்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ளவில்லை எனில் சினிமாவில் பட வாய்ப்புகளை பெற இயலாது என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட நடிகை ராஷ்மி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
திரையுலகம் நடிகை ராஷ்மி புதியது என்பதால் சூரஜ் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். ஆகையால் அவர் நடிகை ராஷ்மியை ஆடிஷனில் பங்கேற்பதற்காக அழைத்திருக்கிறார். நடிகையும் அவரது பேச்சை நம்பி உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொள்வதற்காக சென்றிருக்கிறார்.
அங்கு சென்ற அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது . அதாவது அந்த இடத்தில் நடிகை ராஷ்மி மற்றும் சூரஜை தவிர வேறு யாருமே கிடையாது. இதனைப் பார்த்த நடிகை ராஷ்மி, சூரஜ் இடம் வேறு யாரும் இங்கு இல்லையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மி இடம் , சூரஜ் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து இருக்கிறார் . மேலும் நடிகைக்கு பானத்தை ஊற்றிக் கொடுத்து மயங்கச் செய்து இருக்கிறார். பின்னர் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான் பாலியல் ரீதியான துன்புறுத்தலையும் அவருக்கு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலான போராட்டத்திற்கு பின்பு நடிகை ராஷ்மி அந்த இடத்தை விட்டு தப்பி சென்று இருக்கிறார். பின்னர் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தன்னுடைய தாயிடம் அவர் நடந்ததை பற்றி பகிர்ந்திருக்கிறார். இதனைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனே அவர் அவர்கள் இருவரையும் ஹோட்டலில் சந்திக்குமாறு அழைத்திருக்கிறார். அங்கு சென்ற அவர் சூரஜ்-ஐ கன்னத்தில் அறைந்து இருக்கிறார். இனி இதுமாதிரி என் மகளிடம் நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்திருக்கிறார். ராஷ்மி தேசாய் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 13 ல் இறுதிகட்ட போட்டியாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.