முன்னாடி ஒருத்தர்..! பின்னாடி இன்னொருத்தர்..! குட்டை டவுசருடன் ஊரடங்கில் என்ன செய்கிறார் பிரியா பவானி சங்கர்?..?

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து இரண்டு ஆண் நண்பர்களுக்கிடையே நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கினார் பிரியா பவானி சங்கர். ரசிகர்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பின் மூலம் பின்னர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் முதல் முறையில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் மான்ஸ்டர் மற்றும் மாபியா போன்ற திரைப் படங்களில் கதாநாயகியாகவும் கலக்கி வந்தார். இவர் தற்போது குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், இந்தியன் 2, கசடதபற, பொம்மை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பெரும்பாலான நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து சாலையோரத்தில் இரண்டு ஆண் நண்பர்களுக்கு நடுவில் நின்று போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.