எல்லாத்தையும் குறைச்சி பார்த்துட்டேன்..! ஆனால் அது மட்டும் கிடைக்கவே மாட்டுது..! தவிக்கும் பப்ளிமாஸ் நடிகை!

தமிழ்த்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம்பாஜ்வா, உடல் எடையை பாதியாக குறைத்த பின்பும் தனக்கு போதிய படவாய்ப்பு கிடைக்காததால் மன வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர்.சியுடன் இணைந்து முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.

இந்தத் திரைப்படங்களில் நடித்திருந்த பூனம்பாஜ்வா உடல் எடையை அதிகரித்துக் கொண்டார் . இவருடைய உடல் எடை கூடிய மையால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நடிகை கருதியிருக்கிறார். இதனை தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து தற்போது தன்னுடைய உடலை பாதியாக குறைத்து இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

உடல் எடையை குறைத்த நடிகை பூனம் பாஜ்வா, புதியதாக கவர்ச்சி மிகுந்த போட்டோ ஷூட்களை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பூனம் பாஜ்வாவா இது ? என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ஆனால் இவ்வளவு கடினப்பட்டு உடல் எடையை குறைத்த பின்பும் இந்த நடிகைக்கு படவாய்ப்புகள் கிடைக்காமையால் வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே முன்னணி நடிகைகள் பலரும் தங்கள் உடல் எடையை குறைத்து பட வாய்ப்புகளை பெற்றமையால் அதே வழியை தற்போது பூனம்பாஜ்வா தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமையால் வருத்தத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.