திருமணமாகி 10 ஆண்டுகள்..! 9 வயதில் மகன்..! நடிகையின் வயது 34! இப்போது வெளியான புகைப்படத்தை பாருங்க..! யாருனு தெரியுதா?

பிரபல நடிகை நவ்யாநாயர் நீச்சல் குளத்தில் உள்ளது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


சில வருடங்களுக்கு முன்பு தமிழ் ,மலையாளம், கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை நவ்யாநாயர் ஆவார். ஏராளமான மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, பாசக்கிளிகள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நவ்யா நாயர் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டார். இவர் கடந்த ஆறு வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நவ்யா நாயர் தற்போது மலையாளத்தில் ஒருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை மம்முட்டி மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை நவ்யா நாயருக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதாகும் நடிகை நவ்யா நாயர் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.