திருமணமான தனுஷ் உடன் ஊர் சுத்தனும்..! விஜய்க்கு மனைவியாகனும்..! இளம் நடிகை சொன்ன விபரீத ஆசை!

சென்னை: ''தனுஷ் உடன் டேட்டிங் செல்லவும், விஜயை திருமணம் செய்யவும் விரும்புகிறேன்,'' என்று ஜிப்ஸி நடிகை கூறியுள்ளார்.


ராஜூ முருகன் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ஜிப்ஸி. நல்ல கதைக்களத்துடன் கூடிய இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இருவரது நடிப்புமே பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை நடாஷா சிங்,  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.  

அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ''நடிகர் ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளேன். அதேபோல, நடிகர் தனுஷ் உடன் டேட்டிங் செல்லவும்   ரொம்ப ஆசை. இதைவிட முக்கியமாக, நடிகர் விஜயை திருமணம் செய்ய விரும்புகிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  அவரது கலகல பேட்டி தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.