கர்ப்பிணி மனைவி! கடைசியாக ஒரே ஒரு முறை! அந்த ஆசை நிறைவேறாமல் மரணம் அடைந்த சிரஞ்சீவி! கசிந்த வாட்ஸ்அப் தகவல்!

சமீபத்தில் இறந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் கடைசி ஆசை நிறைவேறாமலே உயிரிழந்திருக்கும் அவரின் வாட்ஸ் அப் தகவலினால் ரசிகர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த கன்னடத் திரைத்துறையின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் மரணச் செய்தி கன்னட திரைத்துறை மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதநாயாகியாக நடித்திருந்த நடிகை மேக்னா ராஜை, சிரஞ்சீவி சர்ஜாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையில், தற்போது மேக்னா ராஜா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தற்போது கசிந்த வாட்ஸ் அப் தகவல் காரணமாக சிரஞ்சீவி சர்ஜாவின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தகவல் என்னவென்றால் சிரஞ்சீவி சர்ஜாவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போயுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்குமார், சிரஞ்சீவி சர்ஜாவின் மாமா என்பதால், அவர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறப்பை தாங்க முடியாமல் கண்கலங்கிய புகைப்படங்களும் தற்போது வெளியாகின. புகைப்படம் மட்டுமின்றி அதில், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது நண்பரான பிரஜ்வால தேவ்ராஜிடம் வாட்ஸ் ஆப்பில் சேட் செய்த புகைப்படங்கள் அதை வெளிக் கொண்டு வந்துள்ளன.

அந்த தகவலில், ஐ லவ் யூ கய்ஸ் என்று தெரிவித்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, நாம் இந்த ஊரடங்கிற்கு பிறகு ஒரு வாரம் சுற்றுலா செல்ல வேண்டும். நாம் மட்டும்தான் நண்பர்களே, நாம் இழந்தவைகள் குறித்து பேசலாம், என்னை நம்புங்கள் நாம் ஒன்றாக இருப்பதை விட விலைமிக்கக்கூடியது ஒன்றும் இல்லை. நாளைக்கு நமக்கு என்ன ஆகும் என்று தெரியாது என்று பதிவிட்டு தன்னுடைய சேட்டிங்கை முடித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள், கடைசி ஆசைக் கூட நிறைவேறாமல், இளம் வயதில் இறந்துவிட்டாரே என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த வாட்ஸ் தகவல்.