திருமணமாகி 11 வருடம்..! கணவன் இருக்கும் போதே இன்னொரு நடிகர் மீது ஆசையை வெளிப்படுத்திய மீனா..!

திருமணமாகி 11 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் நடிகை மீனா நடிகர் ஹிருத்திக் ரோஷன் குறித்து துரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தார். திருமணத்திற்குப் பின்பு குடும்பத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவால் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகை மீனா த்ரோ பேக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஹிருத்திக் ரோஷனுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது திருமணம் முடிந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது பாலிவுட் கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனுடன் கைகுலுக்கி அவருக்கு வாழ்த்துக்களை கூறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக, என் இதயம் உடைந்த நாள்.. பெங்களூருவில் அவரது திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. என்று பதிவிட்டிருக்கிறார். நடிகை மீனா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

ஹிருத்திக் டிசம்பர் 2000 இல் சுசேன் கானை மணந்தார். அவர் மூத்த நடிகர் சஞ்சய் கான் மற்றும் ஃபெரோஸின் மருமகளின் மகள். இந்த தம்பதியினருக்கு ஹிரேஹான் மற்றும் ஹிருதன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். அவர்கள் 2014 இல் விவாகரத்து பெற்றனர். ஹிருத்திக் மற்றும் சுசேன் ஆகியோர் தற்போது மும்பை வீட்டில் தங்கள் மகன்களுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.