வயது வந்த மகளின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சீனியர் நடிகை! யார் தெரியுமா?

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் கஜோல் அவரது மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புதிய பதிவை பதிவிட்டிருக்கிறார்.


இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் நடிகை கஜோல் ஒருவராவார். இவர் இந்தி மட்டுமில்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர். சமீபத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து விஐபி-2 என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கஜோல் அஜய்தேவ்கன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நைசா தேவ்கன் என்ற மகள் உள்ளார். 16 வயதாகும் நைசா சிங்கப்பூரில் பயின்று வருகிறார்.

கஜோல் அவரது கணவர் உடன் இணைந்து அடிக்கடி தங்களுடைய மகளை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்று வருவதை தங்களுடைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு சில நேரங்களில் தன்னுடைய பெற்றோரையும் உறவினர்களின் பார்ப்பதற்காக இந்தியாவிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை கஜோல் தன்னுடைய மகளின் பிரிவை தாங்க முடியாமல் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது நைஸாவின் அழகிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு என் மகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பினை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நைசா அந்தப் புகைப்படத்தில் அழகிய ஜொலி ஜொலிக்க கூடிய லெஹங்காவை அணிந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த கஜோலின் ரசிகர்கள் கஜோலின் அன்பையும் அவரது பதிவையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது கஜோல் பதிவிட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.