ஆளை விடுங்க! பணத்தை திரும்ப பிடிங்க! உதயநிதி படத்தில் நடிக்க மறுத்த காஜல் அகர்வால்..! காரணம் அந்த ஹீரோவாம்..!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை காஜல் அகர்வால் அந்த படத்தில் இருந்து திடீரென விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களானான நடிகர் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்த கோமாளி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் நடிகை காஜல் அகர்வால் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதற்காக முன்பணம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், வாங்கிய முன்பணத்தை திரும்ப கொடுக்க முடிவுசெய்து உதயநிதி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகர் சிரஞ்சீவி உடன் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் நடிகை காஜல் அகர்வால் இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. நடிகை காஜல் அகர்வால் தற்போது ஹாலிவுட், பாலிவுட் போன்ற பல மொழிகளில் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது.