2வது கணவருடன் 3வது குழந்தை பெற்றுக் கொண்ட பிரபல நடிகை..! யார் தெரியுமா?

பிரபல நடிகை திவ்யா உன்னி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மூன்றாவது முறையாக குழந்தை பெற்றுக் கொண்ட செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சபாஷ், வேதம், பாளையத்தம்மன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகை திவ்யா உன்னி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு டாக்டர் சுதிர்சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

இவர்களுக்கு அர்ஜுன்,மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.  அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டதால் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகை திவ்யா உன்னி நடன பள்ளி ஒன்று தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த முடிவின் காரணமாக இருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் கேரளாவை சார்ந்த அருண் குமார் என்பவரை திவ்யா உன்னி சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அவரது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திவ்யா உன்னி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.