அந்த விஷயத்தில் என் காதலனை விட அவன் அப்பா தான் செம்ம..! கூச்சப்படாமல் பேசிய தோனி பட நடிகை!

அந்த விஷயத்தில் என் காதலன் ஜாக்கியை விட அவரது தந்தை டைகர் ஷெராப் தான் செம்ம என பாலிவுட் நடிகை திஷா பதானி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான திஷா பதானி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிகர் டைகர் ஷராஃப்பை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த நடிகை.

சமீபத்தில் அளித்த பேட்டியில் தன் காதலரின் தந்தை ஜாக்கி ஷராஃப் பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார். டைகர் ஷராப்பின் தந்தை ஜாக்கியைப் புகழ்ந்து திஷா பதானி பேசியிருக்கிறார். நடிகை பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடிகர் திஷா பதானி சல்மான் கானின் ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் படப்பிடிப்பில் இருந்தார். இப்படத்தில் அவரது பாலிவுட் திரையில் முன்னணி நடிகர்களான சல்மான் மற்றும் டைகர் ஷெராப்பின் தந்தை ஜாக்கி ஆகியோர் உடன் இணைந்து நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த திஷா பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசுகையில் தன்னுடன் பணியாற்றும் சக நடிகர்களை பற்றி மனம் திறந்து கூறினார். என்னுடைய காதலரின் தந்தையான ஜாக்கியை பற்றி பேசும்பொழுது அவர் மிகவும் பண்பானவர், தாழ்மையானவர் என்றும் அவர் உடன் பணியாற்றுவது மிகவும் எளிமையான செயல் என்றும் பெருமையாக கூறினார். அது மட்டுமில்லாமல் அவருடைய காட்சிகளை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பொதுவாகவே அவருடைய மகனுடன் ஹேங்கவுட் செய்வதைவிட இவருடன் ஹேங்கவுட் செய்வது மிகவும் சூப்பராக இருக்கும். நான் மிகவும் கூலாக உணர்வேன் என்று கூறியிருக்கிறார். நீங்கள் ஒரு உள்முக சிந்தனையாளராக இருந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் நீங்கள் அவருடன் இருக்கும்போது, ​​அவர் உங்களை அதிகம் பேச வைப்பார் என்று நடிகை திஷா, ஜாக்கியை பற்றி கூறியிருக்கிறார். 

தற்போது ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளன. இந்நிலையில் அவர்கள் தங்களுடைய த்ரோ பேக் புகைப்படங்கள் மற்றும் பல கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வண்ணமுள்ளன. அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் பல பதிவுகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வண்ணம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.