அவரை நான் காதலிக்கவே இல்லை..! அஞ்சாத நடிகை பிடிவாதம்..! அப்போ ஒரே அறையில் தங்குனதெல்லாம்?

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை அஞ்சலி, நடிகர் ஜெய்யை தான் காதலிக்கவில்லை என்று கூறியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த அங்காடிதெரு, எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. நடிகை அஞ்சலி தமிழைப் போலவே தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

பின்னர் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக சில காலம் திரைப்படங்களை விட்டு விலகி இருந்தார். மீண்டும் நடிக்க வந்த நடிகை அஞ்சலி, சிந்துபாத், பேரன்பு, நாடோடிகள் 2 போன்ற திரைபடத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது நடிகை அஞ்சலி சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகை அஞ்சலியும் ஜெய்யும் இணைந்து எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். திரைப்படம் வெளியான பின்பு இருவரும் ஒன்றாக இணைந்து பல இடங்களில் சுற்றி திரிந்தனர்.

அதுமட்டுமில்லாமல் பல போட்டிகளிலும் பங்கேற்று தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் ரசிகர்களிடமும் பகிர்ந்துகொண்டனர். இதனை பார்த்து அவர்களது ரசிகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது சமீபத்தில் நடிகர் ஜெய் எனக்கும் அஞ்சலியை பிடிக்கும் எனவும் அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறியிருந்தனர். ஆனால் நடிகை அஞ்சலி தற்போது வெளியிட்டுள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடிகர் ஜெய் எனக்கு நல்ல நண்பர் மட்டும்தான். இதைத் தவிர எங்கள் இருவருக்கும் காதல் எல்லாம் கிடையாது. நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் காதலிக்க வில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைக் கேட்டு அவரது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.