மீண்டும் வெளியான ஆண்ட்ரியாவின் அந்தரங்க வீடியோ..! இந்த முறை வேறு ஒரு ஆணுடன் உதட்டு முத்தம்..! யார் தெரியுமா?

நடிகை ஆண்ட்ரியா ஆண் ஒருவருக்கு உதட்டு முத்தம் அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி மற்றும் பல முக்கிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் இவர் சமீபத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை ஆண்ட்ரியா, திருமணமான ஆண் ஒருவருடன் உறவில் இருந்து வந்ததால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறியிருந்தார். மேலும் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட பல சம்பவங்களைக் குறித்து புத்தகம் ஒன்றில் எழுதி அதனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தார் ‌. இதனைத்தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருந்து வந்தது. இதற்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து படுக்கை அறையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

மேலும் அவள் திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சித்தார்த்துடன் இணைந்து படுக்கையறையில் ஒன்றாக நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகை ஆண்ட்ரியா வின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் உலாவி வருகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான அந்த வீடியோவில் ஆண்ட்ரியா ஆண் ஒருவருக்கு லிப்-லாக் அளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளும் அவள் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. தற்போது நடிகை ஆண்ட்ரியாவின் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.