நடிகை லட்சுமிமேனன் எனக்கு விரைவில் டும்.. டும்.. டும் ..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் நடிகை லட்சுமிமேனன்.


கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமிமேனன் , தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். திரைப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பெரிதாக பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் நடிகை லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்கி திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக வலம் வந்தார் நடிகை லட்சுமி மேனன். கிராமத்து பாங்கான இந்த திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்.

இதனையடுத்து கார்த்திக்கு ஜோடியாக கொம்பன் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நான் சிகப்பு மனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் . நடிகை லட்சுமிமேனன் கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நடிகை லட்சுமி மேனனுக்கு போதிய படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது 22 வயதாகும் நடிகை லட்சுமி மேனன் திருமண பந்தத்தில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவரது வீட்டார் இவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மாப்பிள்ளைகளை சார்ட் லிஸ்ட் செய்து வைத்துள்ளதாகவும், அவர்கள் யார் என்று ரகசியமாக வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு மாப்பிள்ளை கேரளாவில் பிரபலமான தொழில் அதிபரின் வாரிசு என்றும் மற்றொருவர் கனடாவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர் என்றும் சொல்லப்படுகிறது.