முதலில் மனைவி..! பிறகு அமலா பால்..! இப்போது வயதில் மூத்த பெண்..! காரணத்தை கேட்டால் தடுமாறும் நடிகர்!

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு தான் நான் ஜூவாலா கட்டாவை சந்தித்தேன் என்று மனம் திறந்துள்ளார்.


கடந்த 2009-ம் ஆண்டு திரைக்கு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஐதராபாத்தில் சிக்கிக்கொண்ட பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நடிகர் விஷ்ணு விஷாலை மிகவும் மிஸ் செய்வதாக ட்வீட் செய்திருந்தார். இதுகுறித்த சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்த நடிகர் விஷ்ணு விஷால், என் இதயத்தில் காதலுக்கு இடமில்லை. காதல் என்பது திருமணம் பற்றியது. ஆனால் அந்த அத்தியாயம் எப்போதோ எனக்கு முடிவடைந்து விட்டது. ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவற்றையெல்லாம் மறப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

நம்முடைய சோகம் சந்தோஷத்தில் பங்குகொள்ள ஒருவரின் துணை கண்டிப்பாக தேவை. என் மனைவியை விவாகரத்து செய்த பிறகுதான் நான் ஜுவாலா கட்டா வை சந்தித்தேன். அவரும் என்னை போல விவாகரத்து செய்து கொண்டவர். அவர் மிகவும் பாசிட்டிவானவர். அதுதான் அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. சமூக வலைத்தளத்தில் நான் ஜூவாலா கட்டா வின் புகைப்படத்தை போஸ்ட் செய்தாலோ அல்லது அவர் என்னுடைய புகைப்படத்தை போஸ்ட் செய்தாலோ கமெண்ட் அடிக்க ஒரு கூட்டம் இருக்கின்றது. என் மனைவியை பிரிவதற்கு அவர்தான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் என் மனைவியை விவாகரத்து செய்த பிறகுதான் நான் ஜுவாலா கட்டா வை சந்தித்தேன். அதேபோல மேலும் சிலர் நான் ராட்சசன் திரை படத்தில் நடிக்கும்போது அமலா பாலை காதலித்து வந்தேன் எனவும் கூறுகிறார்கள். ஆனால் என் மனைவியை நான் ஏன் பிரிந்தேன் என்று உண்மையான காரணத்தை சொல்லி அவர்கள் நினைப்பது பொய் என்று நிரூபிக்க முடியாது. ஏனென்றால் அது என்னுடைய பர்சனல் விஷயம் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.