விஜய் சேதுபதி ஒரு அரைவேக்காடு! அம்பலப்படுத்திய பேட்டி!

கல்வி மற்றும் கலப்புத் திருமணம் ஆகிய இரண்டும் ஜாதியை ஒழித்து விடும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளதால் அவரை அரைவேக்காடு என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.


தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் விஜய் சேதுபதிதான். இவர் தேர்வு செய்யும் கதைகளும் கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் இருப்பவை.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்த பேட்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது விஜய் சேதுபதி மாலிவுட்டுக்குள் நுழைந்துள்ளார். பிரபல நடிகர் ஜெயராம் உடன் மார்க்கோனி மத்தாய் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி ஜாதி கட்டமைப்பு மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கு எடுத்துக்காட்டாக தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் ஒன்றையும் அவர் கூறினார். சூட்டிங் முடிந்த பின்னர் ஒரு கோயிலுக்கு சென்றபோது பூசாரி ஒருவர் தனது கையில் பிரசாதத்தை கொடுப்பதற்கு பதில் தூக்கி வீசியதாக விஜய் சேதுபதி தெரிவித்தார்.

என்னவென்று கேட்டபோது கேரளாவில் இது தான் வழக்கம் என்று பூசாரி கூறியதையும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார். அந்த சமயத்தில் பாகுபாடு காட்டப்படுவதை அறிந்து தாம் சற்று நொந்து போனதாக அவர் கூறினார்.

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அது கல்வி மற்றும் காதல் திருமணங்களால் மட்டுமே முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கலப்புத்திருமணங்கள் ஜாதியை ஒழித்துவிடும் என்று விஜய் சேதுபதி கூறியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கலப்புத் திருமணம் செய்தால் எப்படி ஜாதி ஒழியும் என்று விஜய் சேதுபதி விளக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் வேறு இரண்டு ஜாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஒரு ஜாதியை தானே பயன்படுத்துகிறார்கள் என்று விஜய் சேதுபதிக்கு பலரும் காட்டமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு சிலர் ஒரு படி மேலே போய் விஜய் சேதுபதியை அரை வேக்காடு என்று விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் ஜாதி என்பது ஒரு கட்டமைப்பு, அதனை ஒழிக்க வேண்டும் என்றால் மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.