விஜய் நடிக்க ஒப்புக் கொண்டு கிளைமேக்ஸ் பிடிக்காமல் விலகிய திரைப்படம்! ஆனால் சூர்யா நடித்து மெகா ஹிட் ஆன படம்! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தனக்கென்று கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்குவதற்காக இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தை கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். ஆனால் இன்று பலராலும் போற்றப்படும் நடிகர் விஜய் ஒரு காலத்தில் சற்று ஏற்ற இறக்கங்களையும் சந்தித்துள்ளார். இவரை வைத்து படம் இயக்குவதற்கு பலரும் யோசித்த நிலையில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தவர் இயக்குனர் விக்ரமன்.


நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "உன்னை நினைத்து" . இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் விஜய் தான் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். இதற்குப் பின்பு அந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் விஜய் இந்த திரைப்படத்தை விட்டு விலகிவிட்டார்.  


பின்னர் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார் . இந்த திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டாக மாறியது . இந்த செய்தியை இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.