ஆளுக்கு ஒரு சவரன் பிகில் மோதிரம்! படக்குழுவுக்கு விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.


ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றது . இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் .

இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல்வேறு முக்கிய நடிகர்களும்  நடித்துள்ளனர் .

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வரும் நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பிகில்  என்று பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் இந்தச் செயலானது படக்குழுவினரை பேரின்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .