பிரதமருக்கு ரூ.25லட்சம்! முதலமைச்சருக்கு ரூ.50லட்சம்! மொத்தம் ரூ.1.30 கோடி! அஜித்தை தூக்கி அடித்த விஜய்!

நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதி உதவியை அளித்து அசத்தியுள்ளார்.


தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவியை வழங்கிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி உதவியாக வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.30 கோடி நிதி உதவியை அளித்து அசத்தியுள்ளார்.

அதன்படி 25 லட்சம் ரூபாயை பிரதமர் பொது நிவாரண நிதிக்காகவும், 50 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகவும், 10 லட்சம் ரூபாயை கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகவும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயும், கர்நாடக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாயும், 5 லட்சம் ரூபாயை ஆந்திரா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும், 5 லட்சம் ரூபாயை தெலுங்கானா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும், 5 லட்சம் ரூபாயை பாண்டிச்சேரி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகவும் நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.