காலைக் காட்சி இல்லை என்றதுமே ரசிகர்கள் என்னவாக கொதித்துப் போனார்கள். அ.தி.மு.க. அரசு விஜய்யை திட்டமிட்டு பழி வாங்குகிறது என்று கொந்தளித்தார்கள். அதன்பிறகு வழக்கம் போல் மண்டியிடுதல், பணம் போடுதல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது.
எப்போதும் ரசிகன் முட்டாள், அதனால்தான் நடிகனும் அரசும் மொட்டை அடிக்கிறார்கள்
அதனால் வெற்றிகரமாக அரசின் அனுமதியுடன் பிகில்,படத்தின் அதிகாலை சிறப்புக்காட்சிகள் நடந்தே விட்டது. இதுதான் இப்போது லேட்டஸ்ட் ட்ரென்ட் என்பது ரசிகர்களுக்குத்தான் தெரிவதில்லை.
பட நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிக்கும் வேலையை அரசுகள் மிகவும் சிறப்பாக செய்கிறது என்பது கடந்த ரஜினி, அஜித் படம் வெளியீட்டு நேரத்திலேயே தெரிந்துபோனது. 500 ரூபாய் கொடுத்து படம் பார்க்க இருப்பவனை 2,000 ரூபாய் கொடுத்தாவது படம் பார்க்கச் செய்யும் யுக்திதான் இது.
இதில் எப்போதும் போல் மாட்டிக்கொள்வது முட்டாள் ரசிகன் மட்டும்தான். நடிகன், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்கள், அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தாமதம்தான் வசூல்.
திரைக்கு வெளியேதான் சிறப்பாக நடிக்கிறாங்கப்பா.