கட்டதுரை! நாய் சேகர்! என்கவுண்டர் ஏகாம்பரம் வரிசையில் வடிவேலு புதிய அவதாரம்! சுராஜூடன் களம் இறங்க பக்கா திட்டம்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் புதிய அவதாரத்தை எடுக்க உள்ளார்.


வைகைபுயல் வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு  முன்பாக  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "இம்சை அரசன் 24ம் புலிகேசி  " திரைப்படத்தில் நடித்திருந்தார் . ஆனால் அந்தத் திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட  பிரச்சனைகள் காரணமாக   நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தை  விட்டு விலகியதாக செய்திகள் வெளியாகின.

தற்போது நடிகர் வடிவேலு இம்சை அரசன் திரைப்படத்தில் இருந்து முற்றிலுமாக விலகியதாக தானே தகவலை வெளியிட்டுள்ளார்.   அவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து துவங்கும் என்று வடிவேலு கூறியிருக்கிறார். மேலும் இனி  வரும் காலங்களில் குறைந்தது  வருடத்திற்கு 2 திரைப்படம்  நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது வடிவேலு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.