அய்யனார் கோவில் திருவிழா! அலப்பறையை கூட்டிய வடிவேலு! இன்ப அதிர்ச்சியில் மக்கள்!

கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு பாடிய பாடலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே கலியாந்தூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோயில்கள் அதிகமாகவுள்ளன. மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா இப்பகுதியில் நடைபெற்றது. கலியாந்தூர் கிராமம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மனைவியின் சொந்த ஊராகும்.

திருவிழாவில் நடிகர் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கலியாந்தூர் கிராமத்தின் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நடிகர் வடிவேலு  பாடல் பாடி அசத்தினார். அவர் பாடியதை கேட்ட கிராம மக்கள் அனைவரும் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

நடிகர் வடிவேலு பாடிய பாடலின் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.