55 வயது தான்..! பிரபல டிவி நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சி காரணம்!

நடிகர் திலகனின் மகனும், தொடர் நடிகருமான ஷாஜி திலகன் கல்லீரல் பாதிப்பு நோயால் காலமானார்.


நடிகர் ஷாஜி திலகன் சாலக்குடி எலின்ஜிப்ரா என்ற இடத்தில் வசித்து வந்தார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தொடங்கி, ஸ்ரீ சுவாதி பாஸ்கரின் "சாகரா வாஸ்தலம்" என்ற சீரியலில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் ஷாஜி நடித்திருக்கிறார்.

நடிகர் திலகன் அவர்களின் இரண்டாவது மனைவியான சாந்தா என்பவருக்கு பிறந்தவர் தான் ஷாஜி. திலகன் அவர்களுக்கு முதல் மனைவியுடன் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பெரிய சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

55 வயதாகும் ஷாஜி கல்லீரலில் ஏற்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை அவரது குடும்பத்தினர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஷாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.