அதிவேகம்! பிரபல நடிகருடன் சாலையில் கவிழ்ந்த கார்! விஜய் - அஜித் போட்டோகிராபர் உயிரிழந்த பரிதாபம்!

தேனி மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கார் விபத்தில் போட்டோகிராபர் ஒருவர் பலியானார் . மேலும் நடிகர் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.


தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கோம்பை என்னும் மலை அடிவாரப் பகுதி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்காக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமராமேன், போட்டோகிராபர் ஆகியோர் அந்த பகுதியில் தங்கியுள்ளனர். நேற்று படப்பிடிப்பு நடைபெற இருந்தது.

அங்கிருந்த அனைவரும் கேரவன் மற்றும் காரில் உத்தமபாளையம் நோக்கி சென்று உள்ளனர். அவர்கள் சென்ற காரை தேனி கோடங்கிப்பட்டியை சேர்ந்த நடிகர் தவசி (வயது 59) என்பவர் ஓட்டினார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் ,தவசி போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். தவசியுடன் சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த சிவா (வயது 55) என்பவரும் காரில் சென்றுள்ளார்.

காரில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆனது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தவசி அவர்களை அங்கிருந்த பொதுமக்களும் போலீசாரும் மீட்டு அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மேலும் இந்த விபத்தில் இறந்த சிவாவின் உடலை போலீசார் கைப்பற்றி அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தவசி குணமாகியுள்ளார். விபத்தை தொடர்ந்து சிவா கையை தொட்டு பார்த்ததாகவும் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததாகவும் கூறி கதறியுள்ளார் தவசி.