நிலவில் சொந்த இடம்! 1 படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம்! ரூ.60 கோடிக்கு சொத்து! ஆனாலும் தோனி நடிகர் தற்கொலை! அதிர்ச்சி காரணம்!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், இந்தியாவிலேயே சொந்தமாக நிலவில் இடம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், ரூபாய் 60 கோடி மதிப்பிலான சொத்துக்களை கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி அண்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் தோனி மாதிரி நடித்து அசத்தியதால் இவரது இந்த திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம். 

இந்நிலையில் 34 வயதாகும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நடிகர் சுஷாந்த், ஒரு திரைப்படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாட்னாவில் உள்ள செயின்ட் கெய்ர்ன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பைப் பெற்றார். டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

2003 ஆம் ஆண்டில், டெல்லி பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வில் பொறியியல் நுழைவுத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 7வது இடம் பெற்றார். இதனை தொடர்ந்து தான் பாலிவுட்டில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ஒன்றில் நடிகராக சுஷாந்த் அறிமுகமானார். நடிகர் சுஷாந்த் சொந்தமாக, நிலவில் இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே நிலவில் சொந்தமாக இடம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார்.

இவருக்கு முன்பு பாலிவுட் கதாநாயகனான ஷாருக்கானுக்கு அவரது ரசிகர் நிலவில் இடம் பெற்று பரிசாக தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சொந்தமாக நிலவில் இடம் வாங்கிய முதல் நடிகர் சுஷாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாரே மஸ்கோவியன்ஸ் அல்லது 'மஸ்கோவி கடல்' என்று அழைக்கப்படும் சந்திரனின் தூரப் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை வாங்கி இருக்கிறார்.‌ 

அதுமட்டுமில்லாமல் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட தொலைநோக்கியையும் நடிகர் சுசாந்த் வாங்கியிருக்கிறார். மேலும் அவர் வாங்கிய அந்த தொலைநோக்கியை பயன்படுத்தி சனி கிரகத்தின் அழகிய வளையங்களை காணப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இவர் ஒரு திரைப்படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் ரூபாய். 60 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய ஆர்வமிக்க ஒரு மனிதர் இவ்வுலக வாழ்வை நீத்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.