சென்னை: 7 ஆண்டுக்குப் பின்னர் நண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி பற்றிய செய்திதான் இது.
எங்க என் நண்பன்..! சின்ன வயசு பிரண்டை தேடிச் சென்ற சூரிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! மனதை உருக வைக்கும் சம்பவம்!

முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி, சமீபத்தில் தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன்போது, தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி ஒரு கதையை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
அதில், ''சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்த ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 7 ஆண்டுகள் போராடி பார்த்துவிட்டு, ஒருநாள் சொந்த ஊருக்கு வந்தேன். என் நெருங்கிய நண்பன் திவாகரை பார்க்க வேண்டும் என விரும்பி, இன்னொரு நண்பனிடம் சொன்னேன். ஆனால், அவனோ, திவாகர் இறந்துவிட்டதாகச் சொன்னார்.
என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாகவும், நான் சந்தித்த மிகப்பெரிய இழப்பாகவும் இருந்தது. 7 ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்த நிலையில் நண்பன் இறந்த செய்தி கூட தெரியாமல் இருந்துவிட்டேனே என்று அடிக்கடி நினைத்து வேதனைப்படுவேன்,'' என்று கூறியுள்ளார்.
இது பழைய வீடியோ என்றாலும், தற்போது மீண்டும் டிரெண்டிங் ஆக தொடங்கியுள்ளது.