தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்! பெண்மணியின் பாவாடையில் பற்றிய தீ..! பாய்ந்து வந்து பிரபல நடிகர் செய்த செயல்!

தீ விபத்தில் மாட்டிக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜரை பத்திரமாக காப்பாற்றியுள்ள நடிகர் ஷாருக்கானுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்தி சினிமாவில் தீபாவளி திருநாளாக பார்ட்டி கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் பார்ட்டி கொடுப்பார்கள் . அதில் மற்ற பிரபல நடிகர்கள் அனைவரும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய இல்லத்தில் தீபாவளி திரு நாளுக்காக பார்ட்டி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த பார்ட்டியில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அந்த பார்ட்டியில் ஐஸ்வர்யாராய் இடம் பல ஆண்டுகளாக மேனேஜராக பணியாற்றி வரும் அர்ச்சனா சதானந்த்தும் பங்கேற்றிருந்தார். 

இந்த பார்ட்டிக்காக அமிதாப்பச்சனின் வீடு அழகான விளக்குகளால் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பார்ட்டியில் பங்கேற்றிருந்த அர்ச்சனாவின் லெஹங்காவில் திடீரென்று அருகிலிருந்த விளக்கிலிருந்து தீப்பற்றியது. இதனை பார்த்த அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் அப்போது அங்கிருந்த நடிகர் ஷாருக்கான் உடனே தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட் பயன்படுத்தி அர்ச்சனாவின் லெஹங்காவில் இருந்த தீயை அணைத்தார். இந்த சம்பவத்தால் அர்ச்சனாவின் கை மற்றும் கால்களில் நெருப்புக் காயம் ஏற்பட்டது. இது மட்டும் இல்லாமல் தீ விபத்திலிருந்து அர்ச்சனாவை காப்பாற்றிய நடிகர் ஷாருக்கானுக்கு சற்று காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   

பின்னர் அமிதாப்பச்சனின் வீட்டிலிருந்து அர்ச்சனாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் சரியாகி விடுவார் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்திலிருந்து அர்ச்சனாவை காப்பாற்றிய நடிகர் ஷாருக்கானுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.