அவ ஒரு நாட்டுக்கட்டை! பார்த்து ஹேன்டில் பண்ணு! நடிகையின் கணவனுக்கு நடிகர் கொடுத்த அட்வைஸ்!

பிரபல நடிகை ஒருவரை நாட்டுக்கட்டை என்று கூறியுள்ள பிரபல நடிகர் ஒருவர் அந்த நடிகையை பார்த்து ஹேன்டில் செய்யுமாறு அவரது கணவருக்கே அட்வைஸ் கொடுத்துள்ளார்.


இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாகித் கபூர். கடந்த ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் இவர் அறிமுகம் ஆனவர். இவர் தற்போது மிரா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக அழகி பிரியங்கா சோப்ராவை ஷாகித் கபூர் தான் காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

   பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடிகர் ஷாகித் கபூர் இருந்த போது தான் வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். அப்போது ஷாகித் கபூரை தனது வருங்கால கணவர் என்று அதிகாரிகளிடம் பிரியங்கா சோப்ரா கூறியதாக தகவல்கள் கசிந்தன. இதன் பிறகு பிரியங்கா சோப்ராவுக்கு ஆங்கில தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அமெரிக்கா சென்ற பிரியங்காவிற்கு ஷாகித் உடனான காதல் கசந்துள்ளது-

  இதனை அடுத்து ஷாகித்தை பிரியங்கா சோப்ரா கழட்டிவிட்டார். பிறகு ஷாகித் கபூர் உடனடியாக மிராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் அமெரிக்காவில் பிரபல பாடகரான நிக் ஜோனாசுடன் பிரியங்காவிற்கு காதல் ஏற்பட்டது. 36 வயதான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரான அதாவது 26 வயதான நிக் ஜோனாசுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். பிறகு காதலை வெளிப்படுத்திய இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

   தனது முன்னாள் காதலி பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு தனது மனைவியுடன் நேரில் சென்று ஷாகித் கபூர் வாழ்த்திவிட்டு திரும்பினார். இந்த நிலையில் ஷாகித் கபூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா சோப்ரா உடனான காதல் குறித்த தகவல்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து ஷாகித்திடம் பிரியங்காவின் கணவர் நிக் ஜோனாசுக்கு உங்கள் அட்வைஸ் என்ன என்று கேள்வி கேட்டார் தொகுதிப்பாளர். அதற்கு சற்றும் யோசிக்காமல் நிக் ஜோனாஸ் பதில் அளித்தார்.

   அதாவது பிரியங்கா சோப்ரா ஒரு ப்யூர் தேசி கேர்ள் என்றார். அதாவது பிரியங்கா சோப்ரா ஒரு சுத்தமான நாட்டுக்கட்டை என்று ஷாகித் கபூர் தெரிவித்தார். எனவே அவரை நிக் ஜோனாஸ் மிகவும் கவனமாக ஹேண்டில் செய்ய வேண்டும் என்றும் ஷாகித் கபூர் கேட்டுக் கொண்டார். தனது முன்னாள் காதலியை நாட்டுக்கட்டை என்று கூறியதுடன், அவரை பார்த்து ஹேண்டில் பண்ணுமாறு அவரது கணவரிடமே ஷாகித் கூறியுள்ளது சரிதான்.