அப்போ தப்பு செஞ்சிட்டேன்..! இப்போ மன்னிச்சிக்கோ..! மகள் வரலட்சுமியின் உருகிய தந்தை சரத்!

பிரபல நடிகர் சரத்குமார் தன்னுடைய மகளான வரலட்சுமி இடம் மனமுருக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.


நடிகர் சரத்குமார் அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது பல திரைப்படங்களிலும் நடித்து சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தற்போது அவர் வெப் சீரிஸ் ஒன்றிலும் பிஸியாக நடித்து வருகிறார் . மேலும் தன் மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோருடன் இணைந்து பிறந்தால் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் பேட்டி ஒன்றில் பேசுகையில் தான் நடிக்கப்போகும் புதிய திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டார் . மேலும் அவர் பேசும் பொழுது தன் மகள் வரலட்சுமி இடம் தான் மனமுருக மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருந்தார் . எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்ட பொழுது அதற்கான விளக்கத்தையும் நடிகர் சரத்குமார் கூறினார். 

அதாவது தன்னுடைய மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் திரையில் வெளியிடுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. ஆகையால் வரலட்சுமி பல நாட்களாக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு தந்தையாக தான் எதுவுமே உதவி செய்யவில்லை என்று நடிகர் சரத்குமார் தற்போது அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

அதாவது தன் மகளுக்கு வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வழிவகை செய்யவில்லை என்றும் தானே தன்னுடைய சொந்த முயற்சியால் திரைத்துறையில் பல சாதனைகளை நடிகை வரலட்சுமி சரத்குமார் புரிந்து இருக்கிறார் என்றும் அவர் கூறினார். தற்போது திரைத்துறையில் அவர் வெற்றி அடைந்து இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் நடிகர் சரத்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.