வரும் 27ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது சித்தி 2 - ஆனால் சித்தப்பாவை மாற்றிய ராதிகா! யார் தெரியுமா?

சித்தி-2 மெகா சீரியலில் நடிகர் சிவகுமாருக்கு பதிலாக மற்றொரு பிரபலம் நடித்திருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


1999-ஆம் ஆண்டின் இறுதியில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த சீரியல் "சித்தி". இந்த சீரியல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலை அவரே தயாரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான்.

இந்த சீரியல் தற்போது 2-வது பாகமாக வருகிற 27-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர் சிவகுமாருக்கு பதிலாக இந்த தொடரில் நடிகர் பொன்வண்ணன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சித்தப்பாவாக சிவக்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சீரியலின் தொடக்கத்திற்கு தமிழகம் முழுவதும் காத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. சித்தப்பாவாக பொன் வண்ணன் எப்படி நடித்துள்ளார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சித்தி 2 முதல் பாகத்தை போல் பட்டி தொட்டி எல்லாம் கலக்குமா?