ராதிகா, ரேவதி, ராதா, அம்பிகா, ஊர்வசி, ஜெயஸ்ரீ, இளவரசி! ஒரே வருடத்தில் 7 ஹீரோயின்களுடன்..! எந்த ஹீரோ தெரியுமா?

ஒரே வருடத்தில் பிரபல நடிகர் மோகன் ராதிகா, ரேவதி, ராதா, அம்பிகா ,ஊர்வசி ,ஜெயஸ்ரீ போன்ற 7 கதாநாயகிகளுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்று ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.


1980களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் மோகன். இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் சத்யராஜ், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் என ஏராளமான ஹீரோக்கள் தமிழ் சினிமாக்களில் அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகர்களாக இருந்து வந்தார்கள். எனினும் நடிகர் மோகன் அந்த காலக்கட்டத்தில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனி ராஜாங்கம் நடத்தி வந்தார். அவரது எதார்த்தமான நடிப்பின் மூலமாக அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவிதமான கதையையும் தேர்வு செய்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் மோகன் ஏராளமான இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். அதைப்போல நடிகர் மோகன் இந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று கூறாமல், எந்த நடிகை என்றும் பாராமல் எல்லா நடிகைகளுடனும் நடித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்சத்துக்கு சென்றார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் நடிகர் மோகன் ஒரே வருடத்தில் 7 கதாநாயகிகளுடன் பல்வேறு திரைப்படத்தில் நடித்து ஆச்சரியமூட்டியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு வெளியான தென்றலே எண்ணை தொடு என்ற திரைப்படத்தில் நடிகர் மோகனுக்கு கதாநாயகியாக ஜெயஸ்ரீ அறிமுகமானார். இதே ஆண்டு வெளியான பிள்ளை நிலா என்ற திரைப்படத்தில் நடிகர் மோகனுடன் நடிகை ராதிகா நடித்திருப்பார். அதை ஆண்டு நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்து வெளியான தெய்வ பிறவி என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா , ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.அதே வருடம் மோகன் கதாநாயனாக நடித்து வெளிவந்த குங்கும சிமிழ் என்ற திரைப்படத்தில் நடிகை ரேவதி மற்றும் இளவரசி நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடத்தில் வெளியான உதய கீதம் என்ற திரைப்படத்தில் நடிகர் மோகனுடன் நடிகை ரேவதி கதாநாயகியாக நடித்துள்ளார். இதே ஆண்டு வெளியான உனக்காக ஒரு ரோஜா என்ற திரைப்படத்தில் மோகனுடன் நடிகை அம்பிகா நடித்திருந்தார்.

இதேஆண்டு வெளிவந்த இதயக்கோயில் என்ற திரைப்படத்தில் நடிகை அம்பிகா மற்றும் ராதாவும் நடிகர் மோகன் உடன் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடிகர் மோகன் 1985ம் ஆண்டு அவர் நடித்த பல்வேறு திரைப்படங்களில் 7 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.