சர்வதேச நீச்சலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்! சாதித்து காட்டிய பிரபல நடிகரின் மகன்! யார் தெரியுமா?

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சர்வதேச ஆசிய நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


14 வயதான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், ஆசிய ஏஜ் ஏசியன் குரூப் 2ம் பிரிவில் 4*100 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஏசியன் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களுருவில் நடைபெற்று வருகின்றன. இதில் நடந்த நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டார். முதல் முதலாக ஏசியன் ஏஜ் குரூப் நீச்சல் போட்டியில் பங்கு பெற்ற இவர் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  

இதை பற்றி நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆசிய போட்டியில் நீச்சல் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்காக கலந்து கொண்டு என் மகன் வேதாந்திற்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.  


நடிகர் மாதவனின் முகப்பின் வேதாந்த் ஏற்கனவே மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டியில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கங்களை நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.