பிரபல காமெடி நடிகருக்கு திடீர் திருமணம்..! மணப்பெண் யார் தெரியுமா?

கும்கி திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகராக நடித்த அஸ்வின் ராஜா நீண்ட நாட்களாக காதலித்து வந்த தன்னுடைய காதலியை இன்றைய தினம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் மகனாக நடித்திருப்பார் காமெடி நடிகர் அஸ்வின் ராஜா. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் அவர்களின் மகன்தான் காமெடி நடிகர் அஸ்வின் ராஜா ஆவார். மேலும் நடிகரின் கும்கி திரைப்படத்தில் தம்பி ராமையா உடன் இணைந்து செய்யும் காமெடி காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக கும்கி என்ற படத்தின் பெயர் இவரது பெயருடன் சேர்ந்து கும்கி ராஜா என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து காமெடி நடிகர் அஸ்வின் ராஜா வந்தான் வென்றான், தில்லு முல்லு போன்ற திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். நடிகர் கும்கி அஸ்வின் ராஜா, சென்னை கேகே நகரில் வசித்து வரும் வித்யா ஸ்ரீ என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்தார். வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் போய் எம்எஸ் படித்து வந்தவர் ஆவார். இவர்கள் இருவரின் காதல் பற்றி குடும்பத்தினருக்கு தெரிய வரவே இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இது இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இன்றையதினம் மிகவும் எளிமையான முறையில் நடந்தேறியுள்ளது.

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைப்பிரபலங்கள் யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் அஸ்வினின் திருமணத்தைப் பற்றி அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் உடன் பணியாற்றிய நடிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.