2 மாதம் தான் டைம்! கெடு விதித்த டைரக்டர்! 14 கிலோ உடல் எடையை குறைத்த கருணாஸ் மகன்! நெகிழ வைக்கும் காரணம்!

நடிகர் கருணாஸின் மகன் கென் விரைவில் திரைக்கு வரவிருக்கும் அசுரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கருணாஸின் மகன் பெண் கூறியதாவது: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் நான் அறிமுகமாக வேண்டும் என்பதுதான் என் அப்பா கருணாஸின் ஆசை .

நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அப்பா கருணாசுடன் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை சந்திக்க சென்று இருந்தோம். அப்போது தான் எனக்கு அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது உடல் எடை 68 கிலோ ஆக இருந்தது. இதைக் கேட்டு தெரிந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் , உடல் எடையை குறைக்குமாறு சொன்னார் .

நானும் சாப்பாட்டை குறைத்து , உடற்பயிற்சி செய்து உடல் எடையை 10 கிலோ வரை குறைத்தேன். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு எந்த அழைப்பும் வரவில்லை . இதனால் என் உடல் எடை மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது .திடீரென்று வெற்றிமாறன் அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன என்று அவர் கூறினார் .

மீண்டும் ஜிம்முக்கு சென்ற 14 கிலோ வரை உடல் எடையை குறைத்து , அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன் எனவும் அவர் கூறியிருந்தார் . அப்பா கருணாஸின் அரசியல் வாழ்க்கை பற்றி பேசிய அவரது மகன் , என் அப்பா மிகவும் நல்லவர் . அவருக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று நான் யாரிடமும் கேட்டதில்லை .

அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை தவிர்த்து விட்டு செல்லலாம் அதை விட்டுவிட்டு அசிங்கமாக பேசுவது எங்களை கஷ்டப்படுகிறது .இவ்வாறு பேசுவது அவரது குடும்பத்தில் உள்ள எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது எனவும் அவர் கூறியிருந்தார் .