இயக்குனர், தயாரிப்பாளருக்கு போதையில் கொலை மிரட்டல்! காமெடி நடிகர் கருணாகரனின் வைரல் ஆடியோ!

கருணாகரன்


பிரபல காமெடி நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல் விடுப்பதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தல் புகார் அளித்துள்ளனர்.

பொது நலன் கருதி வெளியிடுவோர் எனும் படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது- 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இசை வெளியீட்டு விழாவில் கருணாகரன் பங்கேற்கவில்லை. இதனால் கருணாகரனை விமர்சித்து இயக்குனர் சியோனும், தயாரிப்பாளர் விஜய் ஆனந்தும் பேசியுள்ளனர். 

மேலும் தனிப்பட்ட முறையிலும் கருணாகரன் குறித்து இயக்குனர் சியோனும், தயாரிப்பாளர் விஜய் ஆனந்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது- இது குறித்து கருணாகரன் கவனத்திற்கு தகவல் சென்றுள்ளது.

உடனடியாக செல்போனில் தயாரிப்பாளர் விஜய் ஆனந்தை கருணாகரன் தொடர்பு கொண்டுள்ளார். குடி போதையில் பேசும் கருணாகரன், தன்னை பற்றி கன்னாபின்னா வென்று பேசிய இயக்குனர் சியோனை முடித்துவிடப்போவதாக கூறுகிறார்.

அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் சியோனை கூட விட்டுவிடுவேன் ஆனால் தயாரிப்பாளரான உன்னை விடமாட்டேன் என்று விஜய் ஆனந்தை மிரட்டும் தொனியில் கருணாகாரன் பேசுகிறார். இந்த ஆடியோ பதிவை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

பொது நலன் கருதி வெளியிடுவோர் படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் சம்பளமாக கருணாகரனுக்கு வழங்கப்பட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆனால் இதனை பெற்றுக் கொண்டு படத்தின் புரமோசனில் கருணாகரன் பங்கேற்காதது தான் பிரச்சனைக்கு காரணம் என்று விஜய் ஆனந்த் கூறியுள்ளார்.

கருணாகரனுக்கு தி.மு.க பின்புலத்தில் உள்ளதால் தங்கள் உயிருககு ஆபத்து இருப்பதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது இயக்குனரும், தயாரிப்பாளரும் புகார் அளித்துள்ளனர்.